12th February 2024 14:20:13 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் "மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் செயலமர்வை நடாத்தியது.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் உளவியல் ஆலோசகரும் கண் இயக்கம் தேய்மானம் மற்றும் மறு செயலாக்க சிகிச்சையாளருமான லெப்டினன் கேணல் குமுதினி அமரசிங்க முத்தலிப் (ஓய்வு) அவர்கள் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி குணரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் இச்செயலமர்விற்கு தலைமை தாங்கினார்.
இச்செயலமர்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.