09th February 2024 08:04:59 Hours
இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு அனுசரனையளர்களுடன் இணைந்து மேலும் ஒரு புதிய வீட்டை நிர்மாணித்து புதன்கிழமை (07 பெப்ரவரி 2024) காலி, இந்துருவாவில் வசிக்கும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு கையளித்தது.
இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் நலன்புரி திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வின் போது புதிய வீட்டினுக்கான மின்சார உபகரணங்களையும் உலர் உணவு பொதிகளையும் பரிசாக வழங்கினர்.
இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், கட்டுபெத்த இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் களப் பணிமனை படையினர் நன்கொடையாளர்கள் குழுவின் அனுசரணையுடன் கட்டுமான பணியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் இயந்திரவியல் பொறியியல் சேவை வனிதையர் பிரிவின் தலைவி பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன், பிரதி பதவி நிலை பிரதானி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.