08th February 2024 18:56:24 Hours
இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் கருத்திற்கமைய முதலாவது இலங்கை இராணுவ மருத்துவ படையணியில் இணைக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் ஒருவருக்கு குளியலறை உபகரணங்களை முதலாவது இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என்.எச்.யு பெரேரா அவர்கள் பரிசாக வழங்கினார்.
வாகன விபத்தினால் மனைவியை இழந்த பயனாளியின் வேண்டுகோளிற்கு இனங்க இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
மேலும், இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி வைத்தியர் ஏ. நில்மினி பெர்னாண்டோ அவர்களின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 4 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் வீட்டிற்கு இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவு சோபா ஒன்றை பரிசாக வழங்கியது.