01st January 2024 08:00:42 Hours
23 கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலேகெதர அவர்களின் மேற்பார்வையில் 23 கெமுனு ஹேவா படையணி படையினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் அவர்களின் பெற்றோருக்கு தென்னம் பிள்ளைகளும் வழங்கும் நிகழ்வு கிலாலி றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் 26 டிசம்பர் 2023 அன்று இடம்பெற்றது.
நிகழ்வின் போது, 60 பாடசாலை மாணவ, மாணவியருக்கு பாடசாலை உபகரணங்களும், பாடசாலை பேண்ட் இசைக்குழுவினருக்கான இசை உபகரணங்களும், அவர்களின் பெற்றோருக்கு 300 தென்னம் பிள்ளைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், நிகழ்வின் முடிவைக் குறிக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.