07th February 2024 15:27:07 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே அவர்கள் 2024 ஜனவரி 31 ஆம் திகதி அத்திட்டிய ‘மிஹிது செத் மெதுர’ நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
தனது விஜயத்தின் போது, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ‘மிஹிது செத் மெதுர’வில் சிகிச்சை பெற்றுவரும் போர் வீரர்களுடன் சுமுகமாக உரையாடியதுடன், அவர்களின் நலம் மற்றும் அவர்களின் சிகிச்சை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு பரிசுப் பொதிகளையும் வழங்கினார்.
மேலும், 'மிஹிது செத் மெதுர' நல விடுதி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத 'பஞ்ச கர்ம சிகிச்சை நிலையத்தை' திறந்து வைக்குமாறு 'மிஹிது செத் மெதுர' நல விடுதி நிலையத்தின் தளபதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி போர் வீரர்களின் பிள்ளைகளில் ஒருவருக்கு அவரது கல்விக்காக நிதி உதவி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இணைந்து போர்வீரர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினர். விடைப்பெற்று செல்லும் முன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் உறுப்பினர்களும் அங்கு வசிக்கும் போர்வீரர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டனர்.
இந் நிகழ்வில் கஜபா சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.