07th February 2024 15:33:29 Hours
விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் விசேட படையணியில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆடை மற்றும் அத்தியாவசிய உலர் உணவுகள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு 2024 பெப்ரவரி 04 ம் திகதியன்று சீதுவ விசேட படையணி படையலகு தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விசேட படையணியின் படைத் தளபதியும் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ், விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.