07th February 2024 20:13:56 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷார யட்டிவவல அலுவிஹார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புதன்கிழமை (31 ஜனவரி 2024) விஜயபாகு காலாட் படையணியின் படையிருக்கு உளவியல் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, பென்குயின் குழுமத்தின் மனிதவள முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான உளவியலாளர் திருமதி டபிள்யூஎம்என்டபிள்யூ விஜேகோன் அவர்களுடன் மடதும்பர பிரதேச செயலகத்தின் ஆலோசனை உத்தியோகத்தர் திருமதி கங்கா வீரசிங்க, அபகமுவ கோரளை பிரதேச செயலகத்தின் ஆலோசனை உத்தியோகத்தர் திருமதி.கயனி குணவர்தன, மற்றும் பத்ததும்பர பிரதேச செயலகத்தின் ஆலோசனை உத்தியோகத்தர் திருமதி. மிலானி ஹேரத் ஆகியோர் நிகழ்ச்சியின் போது விரிவுரைகளை நிகழ்த்தினார்.
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு சிரேஸ்ட உறுப்பினர்கள் , சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.