07th February 2024 15:39:58 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2024 ஜனவரி 31 ம் திகதியன்று பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையத்தில் ‘தோல் நோய்கள்’ தொடர்பான செயலமர்வு நடாத்தப்பட்டது.
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி குணரத்னவின் அழைப்பின் பேரில், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் தோல் மருத்துவ ஆலோசகர் பிரிகேடியர் (வைத்தியர்) கேபீ நிஷாந்த பத்திரன இந்த அமர்விற்கு தலைமை தாங்கினார். நுண்ணறிவுமிக்க அமர்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அதிகாரிகள், பெண் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.