07th February 2024 17:02:18 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கங்கா ஹேரத்தின் அறிவுறுத்தலின் கீழ் இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கும் விசேட நலன்புரி நிகழ்ச்சி 03 பெப்ரவரி 2024அன்று நடத்தப்பட்டது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி தனது உறுப்பினர்களுடன் இணைந்து ஒவ்வொரு பிள்ளையின் வீட்டு வாசலுக்கும் சென்று பிள்ளைகளுக்கான டயப்பர்கள், பால் மா மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காற்று மெத்தை வழங்கப்பட்டது. நடத்தல் பிரச்சினை, பேச்சு மற்றும் பாடசாலைப் படிப்பில் இயலாமை காரணமாக வீடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள 06 பேர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.