07th February 2024 11:59:17 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு 24 ஜனவரி 2024 அன்று திஸ்ஸமஹாராமய, வீரவில வித்தியார்த்த மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘குரு சிசுபிரணாம உலேல’ என்ற தலைப்பில் விழாவை நடாத்தியது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திலுபா பீரிஸ் கலந்து கொண்டார். வீரவில வித்தியார்த்த மகா வித்தியாலய மாணவர்களினால் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்வுகள் நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில், மாணவர்களின் அசாத்திய திறமைகளை பாராட்டி தலைவி அவர்கள் பரிசில்களை வழங்கி வைத்தார். மேலும், வீரவில வித்தியார்த்த மகா வித்தியாலய ஆசிரியர்களின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக தலைவி நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி ஆசிரியர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.