03rd February 2024 06:57:37 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி கங்கா ஹேரத் அவர்கள் 2024 ஜனவரி 20 ம் திகதியன்று இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்கள், வாழ்த்துக்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.