03rd February 2024 06:50:19 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் காங்கேசன்துறையில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியில் சேவையாற்றும் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு குழந்தைக்கான அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு 2024 ஜனவரி 17 ம் திகதியன்று காங்கேசன்துறை, மைலிட்டி மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது, 14 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொதிகள் மற்றும் பெறுமதியான குழந்தை பொருட்கள் வழங்கப்பட்டன.
இச் செயற்திட்டம் இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசீஎடி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.