31st January 2024 20:46:02 Hours
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் முதலாவது இலங்கை இராணுவ முன்னோடி படையணியில் சேவையாற்றும் வசதியற்ற மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு இரண்டு ஜோடி ஊன்றுகோல்கள் வெள்ளிக்கிழமை ஜனவரி 19 ம் திகதி வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. எச். சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க அனுசரனையாளர் ஒருவரினால் ஊன்றுகோல் ஜோடிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.