01st February 2024 18:44:38 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2024 ஜனவரி 20 அன்று இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தின் புதிய கன்னர்ஸ் சிறப்பு சந்தை பிரிவினை நிர்மாணித்தனர். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கன்னர்ஸ் சிறப்பு சந்தையினை திறந்து வைத்தார். கடையில் உணவு, எழுது பொருடகள் மற்றும் பல அன்றாட பொருட்களை மலிவு விலையில் வழங்கப்படுகின்றன.
இத் திறப்பு விழாவில் இலங்கை பீரங்கி படையணி படைத்தளபதியும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.