01st February 2024 18:44:38 Hours
கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு 2024 ஜனவரி 26 அன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய கொமண்டோ படையணியில் பணியாற்றும் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களின் 20 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி நிமாலி ரணதுங்க கலந்து கொண்டார்.
இந் நிகழ்வு மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள் தங்களின் பாடசாலை உபகரணங்களை பிரதம விருந்தினர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கொமண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.