30th January 2024 19:49:03 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் 29 ஜனவரி 2024 அன்று கம்புருப்பிட்டி 'அபிமன்சல-2' நல விடுதிற்கு விஜயம் செய்தார்.
தலைவி இவ் விஜயத்தின் போது, அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் சுமுகமாக உரையாடியதுடன், அவர்களின் நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து விசாரித்தார். இதன் போது அவர் பரிசுப் பொதிகளையும் வழங்கினார்.
மேலும், நீர் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போர்வீரர்களின் நீச்சல் தடாகத்தை பராமரிப்பதற்கு அத்தியாவசியமான துப்புரவு பொருட்களை தலைவி வழங்கினார். போர்வீரர்களுக்கு மதிய உணவு வழங்கும் நடவடிக்கையில் தலைவி ஈடுபட்டதுடன் நினைவுச் சின்னங்களும் இந்த விஜயத்தின் போது பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் தலைவி அந்நாளின் நினைவாக அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.