24th January 2024 19:41:45 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் கருத்துக்கமைய மறைந்த, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சேவையில் இருக்கும் போர்வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் சிறப்பு போதி பூஜை மற்றும் தர்ம சொற்பொழிவு 19 ஜனவரி 2024 அன்று பனாகொட ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் நடைபெற்றது.
கந்தேகலை விகாரையின் பிரதம தேரரும், மாலபே ஸ்ரீ ராகுல மகளிர் பாடசாலையின் அதிபருமான அதி வண. ராஜகிய பண்டித பம்பராந்தே வஜிரணநாத தேரர் போதி பூஜை மற்றும் தர்ம பிரசங்கத்தை நடாத்தினார்.
இதே நிகழ்வை ஒட்டி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் பூஜை மற்றும் பிரசங்கத்தில் கலந்து கொண்ட 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணைவிகளுக்கு வெள்ளை உடைகள் விநியோகிக்கப்பட்டன.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சமய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர் நிகழ்வின் வெற்றிக்கு தேவையான அனுசரணையை வழங்கினர்.