28th January 2024 15:55:07 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையிரனால் கெமுனு ஹேவா படையணியில் சேவையாற்றும் 50 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு ஜனவரி 20 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையக வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி வெலகெதர கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.