Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th January 2024 20:17:19 Hours

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரின் புத்தக நன்கொடை

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 05) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் 26 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷெஹானி பெர்னாண்டோ பிரதம அதிதியாக இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

நன்கொடை நிகழ்வில் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.