23rd January 2024 16:30:20 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஜனவரி 15 ம் திகதியன்று படையணி தலைமையகத்தில் மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
புஷ்பகுமாரி அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் திரு.ஜகத்புஷ்பகுமார அவர்களால் திட்டத்திற்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
இராணுவத் தலைமையகத்தின் பொதுபணி பணிப்பாளர் நாயகமும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு நிலைய தளபதி, பணி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முக்கிய பங்கு வகித்தனர்.