22nd January 2024 19:52:35 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி வஜிர பெரேரா அவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) சமய ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.