22nd January 2024 20:31:18 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு 2024 ஜனவரி 19 அன்று மகாமைகுளம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இண்டஸ்ட்ரியல் சேப்டி இக்யூப்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் உடன் இணைந்து பாடசாலை உதவி பொருட்களை வழங்கியது. இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த முயற்சி இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 'அகுரட்ட சவியக் திட்டத்தின் கீழ் இண்டஸ்ட்ரியல் சேப்டி இக்யூப்மென்ட் (பிரைவேட்) லிமிடெடின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டது. ‘மாணவர்கள் தங்களின் பாடசாலை உபகரணங்களை பிரதம விருந்தினர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இண்டஸ்ட்ரியல் சேப்டி இக்யூப்மென்ட் (பிரைவேட்) லிமிடெடின் ஊழியர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.