22nd December 2023 21:25:02 Hours
முதலாவது இலங்கை இராணுவ சேவைப் படையணியினால் 09 டிசம்பர் 2023 அன்று பனாகொட ஸ்ரீ போதிராஜாராமயவில் போதி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது இராணுவ மற்றும் சிவில் சேவையாளர்களின் குடும்பங்களின் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்றும் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
வண. தீகல பியதஸ்ஸி தேரர் விசேட 'போதி பூஜை' நிகழ்வை நடாத்தினார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏ.கே. இராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சந்தி ராஜபக்ஷ, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் கலந்துக் கொண்டார்.