14th January 2024 18:18:53 Hours
இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு புதன்கிழமை (ஜனவரி 10) பொரளை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் "பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள்" பற்றிய தகவல் பயிற்சி பட்டறையை நடாத்தியது.
இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி குணரத்ன அவர்களின் அழைப்பின் பேரில், கொழும்பு டி சொய்சா மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ருவன் சில்வா (எம்பிபிஎஸ், எம்டி) அவர்கள் பட்டறைக்கு தலைமை தாங்கினார். நுண்ணறிவுமிக்க இப் பட்டறையில் இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.