10th January 2024 19:22:03 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் 07 ஜனவரி 2024 அன்று ஹொரனவின் கல்பத்தவிலுள்ள ‘சுகிதா’ மாற்றுதிரனாளி சிறுவர் இல்லத்தில் வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதியும், இலங்கை இராணுவ போர் கருவி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சிஎல்எஸ்சி ஏஏடீஓ மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெர்னாண்டோ ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் நன்கொடை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
ருசியான மதிய உணவுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியதுடன் அதில் கலந்து கொண்ட 40 பிள்ளைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்கு அத்தியாவசிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. திருமதி மலிந்த குணவர்தன மற்றும் ஓய்வுபெற்ற கேணல் உபுல்குணவர்தனவின் குடும்பத்தினரும் ‘சுகிதா’ மாற்றுதிரனாளி சிறுவர் இல்லத்தின் பயன்பாட்டிற்காக பரிசுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி பங்களித்தனர்.