05th January 2024 16:26:26 Hours
இலங்கை இராணுவ மருத்து படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (டிசம்பர் 18) கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நத்தார் கரோல் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இலங்கை இராணுவ மருத்து படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ மற்றும் இலங்கை இராணுவ மருத்து படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் நில்மினி பெர்னாண்டோ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.