03rd January 2024 16:53:20 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உத்பலா ஹெட்டியாராச்சியின் கருத்திற்கமைய நலன்புரி திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கு நிதி திரட்டுவதற்காக, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் 2023 ஒக்டோபர் 26 ஆம் திகதி ‘கலண்ட் பார் ஸ்நாக்ஸ்’ சிற்றுண்டிகள் உற்பத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் பங்கு பற்றலுடன் 29 டிசம்பர் 2023 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கலண்ட் பார் ஸ்நாக்ஸ் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
கலண்ட் பார் ஸ்நாக்ஸ் என்பது ஆரோக்கியம் மற்றும் சமகால உணவு வழிகாட்டுதல்களை கடைபிடித்து, மரவள்ளிகிழங்கு, முறுக்குகள், மசாலா வேர்க்கடலை, வேர்க்கடலை கலவைகள் மற்றும் மோதிர முறுக்கு உள்ளிட்ட பிரபலமான சிற்றுண்டிகளை உற்பத்தி செய்கிறது. நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சிற்றுண்டி உற்பத்தி நிறுவனங்களில் மூன்று மாத விரிவான பயிற்சியை முடித்த சிப்பாய்களினால் இந்த சுவையான சிற்றுண்டிகள் தயாரிக்கப்படுகின்றன.