02nd January 2024 18:13:45 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு 29 டிசம்பர் 2023 அன்று படையணி தலைமையகத்தில் நத்தார் கரோல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
நாரஹேன்பிட்டி புனித தெரேசா தேவாலத்தின் கரோல் குழுவினர், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி உறுப்பினர்களுடன் இணைந்து, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இசைக்குழுவின் இசையில் கரோல் கீதங்களை பாடினர்.
இந்நிகழ்வின் போது 36 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், நிகழ்ச்சியின் அடையாளமாக 15 மாணவர்கள் புத்தகப் பொதிகளை தலைவியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். மேலும், பங்கேற்ற ஏனைய பிள்ளைகளுக்கு நத்தார் பரிசில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினரால் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எ.சீ.எ டி செய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கிறிஸ்தவ பக்தர்கள் ஆகியோர் மாலை நடைபெற்ற இந்நிகழ்வைக கண்டுகளித்தனர்.