27th December 2023 20:48:19 Hours
விசேட படையணி சேவை வனிதையர் பிரிவினர் நான்காவது ஆண்டாக தங்கள் புத்தக நன்கொடை திட்டத்தை 23 டிசம்பர் 2023 அன்று நாவுல விசேட படையணி தலைமையகத்தில் நடாத்தினர்.
இதன்படி அனுசரணையாளர் திரு.மாதவா தேனுவர அவர்களினால் 3 மில்லியன் ரூபா பெறுமதியான புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் பிள்ளைகளின் பாவனைக்காக அன்பளிப்பு செய்யப்பட்டன. அவை விசேட படையணியின் சிப்பாய்கள் மற்றும் விசேட படையணியின் சிவில் ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
விசேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில், வருகை தந்த திரு திருமதி தேனுவர மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டதுடன், புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அழைப்பாளர்களில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் அவர்களின் துணைவியார்களும் அடங்குவர்.
விசேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி, 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பீ. எம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.