27th December 2023 20:41:31 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் மற்றுமோர் மனிதாபிமான திட்டமாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி தெஹியத்தகண்டிய நிகாவத்தலந்த கோதமி பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இத்திட்டத்தின் கீழ் ரூபா 70,000/- பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், வருகை தந்த நன்கொடையாளர்களின் முன் பாலர் பாடசாலையின் பிள்ளைகள் தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மஹியங்கனை மெலிபன் ஆடை தொழிற்சாலை, பிஓபீ டிரேடர்ஸ், கேஜிஏ ஸ்டோர்ஸ்-தெஹியத்தகண்டி மற்றும் தெஹியத்தகண்டிய தேசிய பாடசாலையின் அதிபர் உட்பட பல அனுசரணையாளர்கள் இத்திட்டத்திற்கு உதவியதுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஊழியர்களின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.