24th December 2023 21:18:59 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு, நாரஹேன்பிட்டி மத்திய இரத்த வங்கியுடன் இணைந்து பனாகொட இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 21) இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் ஹிமாலி நியங்கொட ஆகியேரின் வழிகாட்டுதலின் கீழ் சமூகம் சார்ந்த இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தேவையான அனுசரணையை கொழும்பு லயன்ஸ் கழகம் வழங்கியதுடன், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் இந்நிகழ்வின் போது தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்.