Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

14th December 2023 18:55:54 Hours

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பாங்கொல்ல ‘அபிமன்சல-3’ க்கு விஜயம்

இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியானி பெர்ணான்டே அவர்கள் பாங்கொல்ல ‘அபிமன்சல-3’ க்கு சனிக்கிழமை (டிசம்பர் 09) விஜயம் மேற்கொண்டதுடன் சிகிச்சை பெற்றுவரும் போர்வீரர்களை சந்தித்து அவர்களின் நலம் விசாரித்தார்.

இந்த விஜயத்தின் போது, இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் பெண்கள், சிகிச்சை பெற்றுவரும் வீரர்களுக்கு பரிசுப் பொதிகள் மற்றும் சிற்றுண்டிகளையும் வழங்கியதுடன் இராணுவத்தின் கலிப்சோ இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள் மூலம் அவர்களுக்கு பொழுதுபோக்கான இசையையும் வழங்கப்பட்டது.