25th May 2023 06:27:45 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு, இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்துடன் இணைந்து திங்கட்கிழமை (08) 72 கர்ப்பிணிகளுக்கு அத்தியாவசியப் பொருட் பொதிகள் வழங்குவதற்கான அனுசரணை வழங்கியது.
தலா 11,500/= பெறுமதியான பொதியில் குழந்தைக்கான பொருட்கள், சவர்க்காரம், பவுடர், குழந்தை மெத்தை, உருளை தலையணைகள், துணிகள், கிருமிநாசினிகள், குழந்தைகளுக்கான ஏப்ரான்கள், பால் போத்தல்கள் போன்றவை அடங்கியிருந்தன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இலங்கை மகளிர் படையணியின் படைத் தளபதியும், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூடீ விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடீஎஸ் பீஎஸ்சி ஆகியோரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை மகளிர் படையணியின் படைத் தளபதியின் அழைப்பின் பேரில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அன்றைய பிரதம விருந்தினரை, இலங்கை மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமலி விஜேசேகர அவர்கள் அன்புடன் வரவேற்று விநியோக இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
மங்கள விளக்கேற்றி அன்றைய நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துடன், அங்கு திட்டத்தின் விரிவான விவரம் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்டத்தின் மூலம் பிரசவத்திற்காக காத்திருக்கும் 72 மகளிர் சிப்பாய்கள் பயனடைந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, இலங்கை மகளிர் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தலைமையக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘ஒலிவ்’ அழகு நிலையத்தினை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திறந்து வைத்தார்.
இலங்கை மகளிர் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜேகேஆர் ஜெயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் அன்றைய பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். அவர் புறப்படுவதற்கு முன், இலங்கை மகளிர் படையணியின் அதிதி புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.