12th August 2023 18:30:48 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 07) ராகமவில் உள்ள ரணவிரு செவன புனர்வாழ்வு நிலையத்திற்குச் சென்று நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் நலம் விசாரித்தார்.
இந்த விஜயத்தின் போது, திருமதி புஸ்ஸெல்ல அங்கு வசிக்கும் போர்வீரர்களுடன் உரையாடி அவர்களின் நலம் குறித்து விசாரித்தார். அன்றைய நினைவுகளைச் சேர்த்து, ஒவ்வொருவருக்கும் பாராட்டுச் சின்னமாக பரிசுப் பொதிகளை வழங்கினார். அதே நேரத்தில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு படைவீரர்களுக்கான மனதைக் கவரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்தது.
அன்றைய பிரதம விருந்தினரை சக்கர நாற்காலியில் செல்லும் போர் வீரர் மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.சீ ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ மற்றும் ராகம ரணவிரு செவன தளபதி பிரிகேடியர் டபிள்யூ.டி.எம் குமாரசிங்க ஆர்எஸ்பீ ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
விஜயத்திற்கு முன்னதாக இலங்கை இராணுவ பொது சேவை படையணி சிப்பாய்கள் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி படைத்தளதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின்படி நிலையத்தின் விடுதி எண் 1 ஐ புதுப்பித்தனர். அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.
இந்த நிகழ்வின் போது மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.