23rd January 2022 07:57:18 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையின் சேவை வனிதையர் பிரிவு மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகம் ஆகியன இணைந்து இராணுவ பொது சேவைப் படையணி படையினரின் குடும்பங்கள் மற்றும் சிவில் ஊழியர் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 1,900,000.00 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்கள் மற்றும் மூக்குகண்ணாடிகளை வழங்கி வைத்தது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி எரங்க ஹேவாவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் அண்மையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
மறைந்த கேணல் எப்.எஸ்.கஸ்தூரியாராச்சிக்கு ஆசி வழங்கும் வகையில் திரு கஸ்தூரியாராச்சி மற்றும் திருமதி கஸ்தூரியாராச்சி ஆகியோர் இவ் நிகழ்விற்கு அனுசரணையளித்தனர். அட்லஸ் ஆக்சிலியா (பிரைவட்) லிமிட் மற்றும் செயின்ட் அனியல்ஸ் லயன்ஸ் கழகம் ஆகியவை இத் திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தன.
இந் நிகழ்வில் படைத் தளபதியும் சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பாளர் பிரிகேடியர் எச்.ஏ.பி.பி.கே.ஹேவாவாசம் , நிலைய தளபதி, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.