08th March 2022 17:26:53 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 08 ஜனவரி 2022 இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் அதிகாரிகளின் துணைவியார்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
சேவை வனிதையர் பிரிவின் புதிய அலுவலகம் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எரங்கா ஹேவாவசம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இக் கூட்டததின் ஆரம்ப நிகழ்வில் மங்கள விளக்கேற்றப்பட்டதுடன் உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, சிவில் ஊழியர்களுக்கான உலர் உணவு பொதிகள், சிறுவர்களுக்கான உதவித்தொகை மற்றும் விசேட தேவையுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன. திருமதி மெரினா பெரேரா மற்றும் ரோசன் டயஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட உரையாடல் அமர்வின் மூலம் நிகழ்வு மிகவும் உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. இந்த நிகழ்விற்கு பிரிட்டிஷ் காஸ்மெட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் அனுசரணை வழங்கியது.