27th April 2022 13:41:45 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரவினர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 09 ஏப்ரல் 2022 பனாகொடவில் உள்ள இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் தலைமையகத்தில் பல நலன்புரி மற்றும் நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரவின் உறுப்பினர்களின் ஒருங்கினைப்பில் தலா ரூ 2500.00. க்கு பெறுமதியான 116 கற்றல் உபகரண பொதிகள் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படையணியின் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எரங்கா ஹேவாவசம் அவர்களால் வழங்கப்பட்டது.
அதே சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிவில் ஊழியர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலா 4000.00 ரூபாய் பெறுமதியான 86 உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து அதிக நன்கொடைகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொன்றும் ரூ. 3200.00 பெறுமதியான 10 விளக்கு திரிகள் தயாரிக்கும் இயந்திரங்கள், எதிர்கால சுயதொழிலை எதிர்பார்க்கும் படையினரின் மனைவியருக்கும், 20 விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு பெறுமதியான பரிசுப் பொதிகளும், சார்ஜென்ட் ஒருவரின் அன்புக்குரிய தந்தைக்கு சக்கர நாற்காலியும், கோப்ரல் ஒருவரின் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டைப் பூர்த்தி செய்வதற்கு ரூபா 1 மீ நிதியுதவியும். இதன் போது வழங்கப்பட்டது.
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான நன்கொடையை வழங்கிய மெரினா அபே நிறுவுனர் திருமதி மெரினா அபயகோன் மற்றும் சக்கர நாற்காலிக்கு அனுசரணை வழங்கிய இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர் திருமதி சதுரிகா களுஆராச்சி ஆகியோர் இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பயனாளியான கோப்ரலுக்கு வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை ஹெர்பாலைன் அழகுசாதனப் பொருட்களின் பணிப்பாளர் திரு. பிரியதர்ஷன பெந்தோட்ட ஆராச்சி வழங்கினார்.
சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு சந்தன ஏக்கநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் பாலித ஹேவாவசம், நிலைய தளபதி மற்றும் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள். சிறப்பு அழைப்பாளர்கள், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், அரச ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.