24th June 2022 10:29:16 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (14) பனாகொட போதிராஜாராமய விகாரைக்கு (இராணுவ விகாரை) வருகை தந்த பக்தர்களுக்கு கடலை மற்றும் இலவச மலர்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எரங்க ஹேவாவசம் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கடலை தானம் மற்றும் பூக்களை வழங்கினர்.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மற்றும் சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர் இந்த திட்டத்தில் பங்கேற்றனர்.