17th August 2022 19:16:33 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் ஜூலை 29 இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையக வளாகத்தில் தொடர்ச்சியான நலன்புரி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்கமைய இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கர்ப்பிணிப் பெண் வீராங்கனைகளுக்கு 130 போஷாக்கு பொதிகளும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் பார்வை குறைபாடுகள் உள்ள வீரர்களுக்கு 100 மூக்கு கண்ணாடிகளும் விநியோகிக்கப்பட்டன.
அதே நாளில், அவர்களின் சமூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரின் ஒருங்கிணைப்பின் மூலம் 150 இராணுவ பொது சேவை படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு இரத்த தானம் வழங்கப்பட்டது.
இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரின் தலைவி திருமதி எரங்க ஹேவாவசம், இத் திட்டங்களின் போது உடனிருந்து, திட்டத்தின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.