09th October 2022 18:54:30 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ பொது சேவை படையணி படையினரின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பாடசாலைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய 100 பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இந் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (2) பனாகொட இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்தா, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்தா அவர்களுடன் இணைந்து இப் பொதிகளை விநியோகித்தார்.
பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு விருந்து முடிவடைவதற்கு முன்னர் அதே நிகழ்ச்சியின் போது பங்குபற்றிய பாடசாலை மாணவர்களுக்கான 'உளவியல்' பற்றிய விரிவுரையும் கலாநிதி சமிந்த வீரசிறிவர்தனவினால் நிகழ்த்தப்பட்டது.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் நிலையத் தளபதி கேணல் பிரியன் சமரவீர, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.