20th November 2022 13:03:40 Hours
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளரும் எக்லிப்ஸ் தனியார் நிறுவனத்தின் ஸ்தாபகருமான திரு.பசிந்து ரத்னசேகர அவர்களால் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் அழைப்பின் பேரில் 12 நவம்பர் 2022 இலங்கை இராணுவ பொது சேவை படையணி சிப்பாய்களின் துணைவியர்களுக்கு 'சுய வேலைவாய்ப்புக்கான வலுவூட்டல்' என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
இராணுவத்தினரின் 100 மனைவிமார்களின் பங்குபற்றலுடன் குடும்பத்துக்கும் பொருளாதாரத்துக்கும் ஒரு நன்மையாக ‘சுய தொழில்’ முக்கியத்துவத்தை மையமாக வைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
அதன்படி, தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்களின் அனுபவங்களும் புதுமையான கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்தா, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் நிலைய தளபதி கேணல் பியல் சமரவீர, கட்டளை அதிகாரிகள், இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இராணுவ வீரர்களின் மனைவியர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.