10th December 2022 22:00:11 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் குழுவினர் சுமார் 35 போர்வீரர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பாங்கொல்லவில் உள்ள ‘அபிமன்சல III’ நல விடுதிக்கு விஜயம் செய்தனர்.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்தா, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்தா, நிலைய தளபதி கேணல் பியல் சமரவீர, சேவை வனிதையர் உறுப்பினர்கள், பெண் அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.
விருந்தினரின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது அங்குள்ள ஒவ்வொருவருக்கும் பரிசு பொதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் தேநீர் சிருந்து மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றன.
போர் வீரர்களுடனான உரையாடலின் போது, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார். “பிரேவ் பீட்ஸ்” எனப் பெயரிடப்பட்ட ‘அபிமான்சல III’ இல் உள்ள போர்வீரர்கள் மத்தியில் ஒரு இசைக் குழுவை உருவாக்கக்கூடிய இசைக்கருவிகளின் தொகுப்பு நன்கொடையாக வழங்கப்பட்டது.