30th December 2022 08:24:22 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் படையினரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் கண்காட்சியையும், தரம் 01 - 05 இல் கற்கும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படையினரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பிள்ளைகளுக்கான புத்தக நன்கொடையையும் டிசம்பர் 23 இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் வளாகத்தில் வழங்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்த அவர்கள் ஏனைய சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பொது சேவை படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஆதரவுடன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பொது சேவை படையணியின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்தா, இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த, சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.