13th March 2023 21:59:40 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இராணுவ பொது சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் இந்திய யோகா ஆச்சார்ய மனோகரன் கீதாகுமாரி மிகிலேஷ் அவர்களால் நடத்தப்பட்ட யோகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
இந் நிகழ்வானது இராணுவ பொது சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்தா அவர்களின் வழிகாட்டலின் கீழ் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு ஆற்றல், வலிமை மற்றும் அழகு சேர்க்கும் வகையில் இரண்டு மணி நேர யோகா பயிற்சியில் சேவை வனிதையர் உறுப்பினர்கள், பெண் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்.