17th April 2023 15:29:58 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட புத்தாண்டு சந்தையை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) தலைமையக வளாகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கண்காட்சியில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி படையலகின் கட்டளை அதிகாரி மற்றும் பணியாளர்கள் இணைந்து பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், இனிப்புகள், உடைகள், காலணிகள், செடிகள் போன்றவற்றை சலுகை விலையில் விற்பனை செய்தனர். இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்தா பிரதம அதிதியை வரவேற்று அவரை அவ்விடத்துக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிகழ்ச்சியானது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்டபிள்யூடிசி மெத்தானந்தா யூஎஸ்பீ என்டிசி அவர்களின் மேற்பார்வையின் கீழ் படையினரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் உறுப்பினர்கள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர்.