29th June 2023 21:58:46 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் திங்கட்கிழமை (மே 26) இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி விரிவுரை மண்டபத்தில் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ருவினா மெத்தானந்தா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது மங்கள விளக்கேற்றப்பட்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவு கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானது, இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் இணைப்பாளர் மேஜர் வை.சி குருகே அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி பங்கேற்பாளர்கள் மத்தியில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு கூட்டத்தில் உரையாற்றினார். இந்த பொது கூட்டத்தில் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி நயோமி டி சில்வாவினால் முந்தைய பொது கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. 2022 -2023 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் நடத்தப்பட்ட நலன் மற்றும் சமூக சேவையின் சுருக்கம் அடங்கிய வீடியோ காட்சிகள் காட்சிபடுத்தப்பட்டன.
கெப்டன் விடி சில்வாவினால் வாழ்க்கைத் திறன்கள் தொடர்பான விரிவுரையும் நடாத்தப்பட்டது. இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பெண் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.