30th June 2023 08:42:19 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல அவர்கள் புதன்கிழமை (21) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த திருமதி ஹிமாலி புஸ்ஸல்லவை இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உப தலைவி திருமதி நிலதி டி சொய்சா மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
மத அனுஷ்டானங்களுக்குப் பின்னர் மங்கள விளக்கை ஏற்றி, அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பெண் அதிகாரிகள் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பின்னர், புதிய தலைவியை வரவேற்க விரிவுரை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்பிரதாயமான நிகழ்விற்கு திருமதி துஷாரி அபேசிங்க அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அவர் கூட்டத்தில் உரையாற்றியதுடன், படையணியின் நலனுக்காக மேலும் பல நலத்திட்டங்களைத் தொடர உறுதியளித்தார்.