20th October 2023 10:04:40 Hours
இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் ஆதரவுடன் இலங்கை இராணுவ பொலிஸ் சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா சனிக்கிழமை (14 ஒக்டோபர் 2023) மஹரகமவில் உள்ள அபேக்ஷா மருத்துவமனைக்கு பழங்கள், பால் மா மற்றும் சுகாதார பொருட்களை நன்கொடையாக வழங்கினார்.
அத்தியவசிய பொருட்கள் அடங்கிய ரூபா 600,000 பெறுமதியான 250 பொதிகள் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் குழந்தைகள் மற்றும் ஏனைய நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. இராணுவப் பொலிஸ் பாடசாலையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பொதுமக்கள் நன்கொடையாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தனர்.
இலங்கை இராணுவ பொலிஸ் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவப் பொலிஸ் பாடசாலையைச் சேர்ந்த சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.