Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th August 2023 00:23:04 Hours

மின்சாரம் மற்றும் இயந்திரபொறியியல் படையணி சேவை வனிதையருடன் ‘மனுசத் தெரண - 61’ பல நலத் திட்டங்கள்

தெரன தொலைக்காட்சியின் 'மனுசத் தெரண' தனது 61வது நலத் திட்டத்தை இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உதவியுடன் சனிக்கிழமை (ஜூலை 29) உடவளவ இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் வேலைத் தளத்தில் சேவையாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் வீரர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏராளமான உள்ளூர்வாசிகளின் நலனுக்காக பல சமூக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது.

இராணுவ சேவை வனிதை பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் மற்றும் ‘மனுசத் தெரண’வின் தலைவர் திரு மகேஷ் ஜயவர்தன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

முதலில் மங்கள விளக்கேற்றி, வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் இசைக்கப்பட்டதை தொடர்ந்து நலத்திட்டங்கள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வின் போது, இலங்கை கண் தானச் சங்கம் இலவச கண் பரிசோதனைகளை மேந் கெதண்டதுடன், 600 இலவச மூக்கு கண்ணாடிகளை விநியோகித்தது, ராகம லீசன்ஸ் மருத்துவமனை சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டங்களைக் கண்டறிவதற்கான 800 சோதனைகள் மற்றும் ஆரம்பகால கொலஸ்ட்ரோல் அபாயங்களைக் கண்டறிவதற்கான 150 மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளித்தது.

இதேவேளை, எக்வா லைட் நிறுவனம் உடவளவ மத்திய கல்லூரிக்கு நீர் சுத்திகரிப்பு கருவியையும், தென்னை பயிர்ச் செய்கை சபையினால் 500 கலப்பின தென்னம் பிள்ளைகளையும், ‘மனுசத் தெரண’ அப்பிரதேசத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிபர்களுக்காக 05 சக்கர நாட்காலிகள் மற்றும் 05 ஊன்றுகோல்களையும் வழங்கியது.

மேலும், வரையறையறுக்கப்பட்ட ஒக்டன் நிறுவனம், இதற்கு முன்பு மின்சாரம் இல்லாத ஏழை வீடுகளுக்கு 03 சூரிய சக்தி அமைப்புகளையும், விவசாயத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு 04 எண்ணெய் தெளிப்பான்களையும் நன்கொடையாக வழங்கியது. இதேவேளை, வரையறையறுக்கப்பட்ட கியோடை லங்கா நிறுவனம், இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளை வழஙடகியது. மேலும், 80 இராணுவ வீரர்கள் அதே இடத்தில் தேசிய இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, ‘மனுசத் தெரண’வின் தலைவருக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்ததுடன், இத்திட்டத்திற்கு இராணுவத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர்களைப் பாராட்டினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர்பிரிவின் தலைவி நன்றியுரை வழங்கியதுடன், இத்திட்டத்தின் முதலாவது பகுதி நிறைவு செய்யப்பட்டது.

பின்னர், அழைப்பாளர்கள் உடவலவ திபோல்கெட்டிய பகுதிக்குசென்று, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் பணியாற்றிய தகுதியுள்ள ஓய்வுபெற்ற அதிகாரவானையற்ற அதிகாரி ஒருவருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளித்தனர். பயனாளி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தற்போது முற்றிலும் படுத்த படுக்கையாக உள்ளார். இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வு பெற்றார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் பிறந்து தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி வேலையில்லாமல் இருக்கிறார். தம்பதியினர் தென்னை ஓலையால் வேயப்பட்ட களிமண் சுவர்களாலான செய்யப்பட்ட தங்குமிடத்தில் வசித்து வந்தனர்.

சிலேவ் ஐலன்ட் வரையறுக்கப்பட்ட அமில டயர்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு நிதியுதவி அளித்தது. உடவலவ இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் மிகவும் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்கினர்.

இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் உடவலவ மத்திய கல்லூரியின் அதிபர், பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட பொது மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.