13th October 2023 07:06:23 Hours
இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் 16வது வருடாந்த பொதுக்கூட்டம் 26 செப்டம்பர் 2023 இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்றதுடன்,அதன் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு பங்குபற்றுதலுடன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்படி, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவிகளான திருமதி சந்திரிகா பெரேரா மற்றும் திருமதி பிரியதர்ஷனி சிறிநாகா மற்றும்சேவை வனிதையர் பிரிவின்சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்குபற்றினர்.மேலும், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி தளபதியும் வழங்கல் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஐஎம்பீ சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி பதவி, இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உப தலைவி மற்றும் செயலாளர் பதவி ஆகியன ஏனைய வெற்றிடங்கள் இந்த நிகழ்வில் நிரப்பப்பட்டன. மேலும், 2023 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களுக்கான போர்வீரர்கள் தொடர்பான நலத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.